கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற சபரிமலை திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு விமான நிலையம் அமைப்பதற்கு கேரள அரசு கடந்த 2020-ஆம் ஆண்டு இடம் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்ற மக்களவையில் எம்பி ஜான் பிரிட்டாஸ் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே சிங் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அவர் கூறியதாவது, சபரிமலையில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக கேரள மாநில அரசு க்ரீன்பீல்ட் பாலிசி அடிப்படையில் அளித்த அறிக்கையை இந்திய விமான ஆணையம் மற்றும் சிவில் போக்குவரத்து இயக்குனரகம், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரத்துடன் பரிசீலித்து வருகிறோம். மேலும் விமான நிலையத்துக்கான இடம் மற்றும் அனைத்து வசதிகள் தொடர்பான அறிக்கையையும் கடந்த டிசம்பர் மாதம் கேரள அரசு தாக்கல் செய்துள்ளதால் அது தொடர்பாகவும் பரிசீலனை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.