பக்தர்களிடம் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் டிசம்பர் 27-ஆம் தேதி சனிப்பெயர்ச்சி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்நிலையில் சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்கள் கொரோனா சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அர்ஜுன் சர்மா அறிவித்துள்ளார். 48 மணி நேரத்திற்கு முன்பாக பரிசோதனை செய்து சான்றிதழ் இருந்தால் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் மூடப்பட்ட நிலையில் கொரோனா சற்று குறைந்தததையடுத்து கோயில்களில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பிரிட்டனில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வைரஸ் சிங்கப்பூருக்கும் பரவியுள்ளது. எனவே பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.