சனாதன விவகாரம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் அனுப்பியுள்ள நோட்டீசை சட்டப்படி எதிர்கொள்வோம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி தொடர்பான உச்ச நீதிமன்ற நோட்டீஸ் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, சட்டப்படி எதிர்கொள்வோம் என்று கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மற்றும் தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது