சந்தோசமாக நடந்த விழா…. திடீரென நடந்த விமான விபத்து…. இருவர் உயிரிழப்பு…!!

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிக்கும் விழாவில் ஈடுபட்ட விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோவில் பெற்றோர்கள் கருவில் இருக்கும் தங்கள் குழந்தையின் பாலினத்தை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்க விழா ஒன்றை ஏற்பாடு செய்தனர். அவர்கள் பறக்கும் விமானத்தில் பேனர் மூலம் தங்களது குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்த வேண்டும் என விமானம் ஒன்றை வாடகைக்கு  எடுத்துள்ளனர்.

இந்நிலையில் வானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதில் கலந்து கொண்டவர்கள் வீடியோ எடுத்து கொண்டாடினர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. கடலில் விழுந்த 2 விமானங்களில் உள்ள விமானிகளில் ஒருவர் மீட்பு பணியின் போது இறந்ததாகவும் மற்றொருவர் சிகிச்சை அளிக்கும் போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.