‘சந்திரலேகா’ சீரியல் செய்த மிகப்பெரிய சாதனை… வாழ்த்தும் ரசிகர்கள்…!!!

சந்திரலேகா சீரியல் 1900 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கும், சீரியல்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா தாக்கம் காரணமாக சில சீரியல்களில் நடிகர்கள், நடிகைகள் மாற்றப்பட்டனர். மேலும் சில சீரியல்கள் கைவிடப்பட்டன. இருப்பினும் ரசிகர்களை கவரும்படி சன் டிவி பல புதிய சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் சந்திரலேகா .

இமாலய சாதனையை நிகழ்த்திய சன் டிவியின் சூப்பர்ஹிட் தொடர் ! - Tamil Movie Cinema News

இந்த சீரியலில் ஸ்வேதா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த சீரியல் 1900 எபிசோடுகளை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இதையடுத்து இந்த சீரியல் குழுவினருக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *