பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் “சந்திரமுகி-2”. ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். இதில் கங்கனா அண்மை காலமாக அரசியல் மற்றும் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பற்றி அவ்வப்போது கருத்து சொல்லி வருவதால் சர்ச்சைகளில் சிக்கிக்கொள்கிறார்.

இதனால் படப்பிடிப்புகளுக்கு போகும்போது அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக சந்திரமுகி -2 படப்பிடிப்பு தளத்திற்கு தன் மேக்கப் மேன்கள், காஸ்டியூமர்கள் மட்டுமின்றி துப்பாக்கி ஏந்திய சிஆர்பிஎப் வீரர்கள் 4 பேர் அடங்கிய செக்யூரிட்டியுடன் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து செல்கிறார் கங்கனா ரனாவத்.