சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள “குலு குலு”…. ஓடிடி உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்….!!!!!

சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் குலு குலு திரைப்படத்தை சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகராக வலம் வருகின்றார் சந்தானம். இவர் முதலில் நகைச்சுவை நடிகராக நடித்த வந்த நிலையில் தற்போது கதாநாயகனாக நடித்த வருகின்றார். இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் குலுகுலு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ராஜனாராயணன் தயாரிக்க சந்தோஷ நாராயணன் இசையமைத்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டப்பணிகளானது நடந்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் ஓடிடி உரிமையையும் சேட்ல்டிலைட் உரிமையையும் சன் டிவி நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கி இருப்பதாக சொல்லப்படுகின்றது. இதற்கு 11.5 கோடி கொடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவ்வளவு பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகி உள்ளதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *