சத்யபாமா இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி 35-ஆம் ஆண்டு கலாச்சார விழா 2023 கொண்டாடியது. இந்த நிகழ்ச்சியின் போது நடிகை நயன்தாரா சத்யபாமா பிராண்ட் அம்பாஸடர் 2023 ஆக தேர்வு செய்யப்பட்டார். சத்யபாமா பல்கலையின் வேந்தரின் சிந்தனையில் உருவாகிய “மதுகை” (The Strength – தி ஸ்ட்ரெங்த்) எனும் திட்டத்தை நயன்தாரா துவங்கி வைத்தார்.

நயன்தாராவுக்கு திருமணம் முடிந்தபிறகு தான் பல்கலைக்கழகத்தின் பிராண்ட் அம்பாஸடராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மரிய ஜீனா ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது சோஷீயல் மீடியாவில் வைரலாகி வருகிறது.