சதுர்த்தியை முன்னிட்டு…. விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு…. ஏராளமான பக்தர்கள் தரிசனம்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள முத்தனூரில் வருண கணபதி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு தயிர், இளநீர், சந்தனம், பன்னீர், பால் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதேபோல் குறுக்குசாலை, அண்ணாநகர் குப்பம், சேமங்கி, அத்திப்பாளையம், உப்புபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருக்கும் விநாயகர் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.