
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான நிதிஷ் ரெட்டி இந்திய கிரிக்கெட் அணியில் சேர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். நிதிஷ் ரெட்டி ஐபிஎல் சன்ரைஸ் ஹைதராபாத் அணியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் இந்திய டி20 அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தது.
அந்த தொடரிலும் சிறப்பாக விளையாடி ஆட்டநாயகன் விருதைப் பெற்ற நிதிஷ் ரெட்டி பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆல்ரவுண்டராக விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றார். இதில் மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் போது 114 ரன்கள் எடுத்தார் நிதிஷ் ரெட்டி.
இதனால் சதம் அடித்த நிதிஷ் ரெட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதாக ஆந்திர கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. இந்நிலையில் நிதிஷ் ரெட்டியை நேரில் சந்தித்து வாழ்த்து கூறிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பரிசுத் தொகைக்கான காசோலையும் வழங்கினார்.