‘ சண்டக்கோழி 2 ‘படத்தின் முக்கிய வழக்கு… விஷாலுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..‌.!!!

நடிகர் விஷாலுக்கு ‘சண்டக்கோழி 2’ படத்தின் முக்கிய வழக்கிற்காக சென்னை நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சண்டக்கோழி’. இந்த படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் லிங்குசாமி – விஷால் கூட்டணியில் ‘சண்டக்கோழி 2’ திரைப்படம் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ராஜ்கிரண் ,நடிகை கீர்த்தி சுரேஷ் ,வரலட்சுமி சரத்குமார், கஞ்சா கருப்பு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Sandakozhi 2 movie review: Here's what audience has to say about Vishal and  Keerthy Suresh starrer - News

இதையடுத்து சண்டக்கோழி 2 படத்திற்காக பைனான்சியர் விஜய் கோத்தாரியிடம் கடனாக பெற்ற 50 லட்சத்தை திருப்பி தராததாக விஷால் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் 50 லட்சத்தை விஷால் திருப்பிக்கொடுக்க உத்தரவிட்டுள்ளனர்.