நீலகிரி மாவட்டத்தில் உள்ள படகு இல்லம் பகுதியில் மதுவிலக்கு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக சுற்றித்திரிந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் மஞ்சனக்கொரை பகுதியை சேர்ந்த வேணுகோபால் என்பது தெரியவந்தது. அவர் சட்ட விரோதமாக பகுதியில் மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் வேணுகோபாலை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.