சட்ட விரோதமான செயல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்திலுள்ள சிவகிரியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் குமார் என்பது தெரியவந்துள்ளது. மேலும் குமார் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிந்த காவல்துறையினர் குமாரை கைது செய்ததோடு அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *