சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய இரண்டு நபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

மணல் கடத்திய மாட்டுவண்டியை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மறையூர் பகுதியில் ஆற்று மணல் கடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் மேல வண்டான் விடுதியில் காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக வந்த இரண்டு மாட்டு வண்டிகளை சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் மணல் கடத்திய குற்றத்திற்காக சுப்பிரமணியன் மற்றும் நாகராஜன் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *