சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய மூவர்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக சாராயம் காய்ச்சிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மணக்கரை செல்லும் சாலையில் ஒரு செங்கல் சூளை அமைந்துள்ளது. இங்கு சாராயம் காய்ச்சி கொண்டிருந்த 3 பேரை காவல்துறையினர் சுற்றி வளைத்து பிடித்து விட்டனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் சாமியார் பகுதியில் வசிக்கும் மாரி முத்து, ரமேஷ் குமார் மற்றும் வேல்பாண்டி என்பது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 19 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்துவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *