சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் ரோடு ஜெ. ஜெ நகரில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு மூட்டையில் மதுபாட்டில்களை வைத்து மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செட்டிபுதூர் பகுதியில் வசிக்கும் தங்கவேல் என்பது தெரியவந்துள்ளது.

அதன் பின் தங்கவேலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 200 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *