சட்ட விரோதமாக ரேஷன் அரிசியை கடத்தி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கேதாண்டப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவளியாக வேகமாக வந்த லாரியை போலீசார் மடக்கி சோதனை நடத்தினர். அப்போது சட்டவிரோதமாக லாரியில் 50 டன் ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது.
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் லாரி ஓட்டுநர் பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்த சரவணன்(54) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சரவணனை கைது செய்தனர். மேலும் 50 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.