சட்ட விரோதமாக விற்பனை….போலீசார் அதிரடி ரோந்து…. பெண் உள்பட 7 பேர் கைது….!!

காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சட்ட விரோதமாக மது மற்றும் புகையிலை விற்பனை செய்த பெண் உள்பட 7 பேரை கைது செய்துள்ளனர்.

தேனி மாவட்டம் வீரபாண்டி காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர்கள் லதா, வரதராஜன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்த காமராஜபுரத்தை சேர்ந்த அமராவதி, உப்புகோட்டையை சேர்ந்த அய்யர், லட்சுமிபுரத்தை சேர்ந்த ராஜா என்ற 3 பேரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து புகையிலை விற்பனை செய்தது தொடர்பாக வீரபாண்டியை சேர்ந்த  முருகேசன், சுருளி, மனோகரன், போடேந்திரபுரத்தை சேர்ந்த வளர்மதி ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *