சென்னை போரூர் குன்றத்தூர் சாலையில் கெருகம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ஒரு வாலிபர் நடந்து சென்றார். திடீரென அவர் அந்த வழியாக சென்ற வாகனத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.