சட்டவிரோதமாக செய்த செயல்… ரோந்து பணியில் சிக்கியவர்கள்… காவல்துறை அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் நேற்று முன்தினம் முதல் ஆறாம் தேதி வரை மூன்று நாட்களுக்கு மது கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் மதுபானம் வாங்குவதற்காக மது கடைக்கு வந்த மது பிரியர்கள் சிலர் கடை பூட்டியிருந்ததை கண்டு ஏமாற்றத்துடன் திரும்பினர். சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தொகுதியில் உள்ள மதுக்கடைகள் நேற்று முன்தினம் அடைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்தனர். அந்தவகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழாயூர் காலனி புறவழிச்சாலையில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு சென்ற காவல்துறை அதிகாரிகள் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட இளங்கோவன், தியாகராஜன், சேவியர், பிராந்தமங்கலம் பகுதியில் வசித்து வரும் பாபு ஆகிய 4 பேரையும் மடக்கி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 114 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். அதன் பின் அவர்கள் நான்கு பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.