சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு… முன்னேற்பாடு பணிகள் தீவிரம்… தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பொது பார்வையாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்கள் நத்தம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட புதூர், சிறுமலையில் பழையூர், அண்ணாநகர் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்தலை முன்னிட்டு தேர்தல் பொது பார்வையாளர் பாபு நேற்று முன்தினம் வாக்குச்சாவடி மையங்களை நேரில் சென்று ஆய்வு செய்தார். தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடன் இருந்தனர்.