சசிகலா நுழைய சிக்கல்…! போலீஸ் கொடுத்த நோட்டீஸ்… அதிரடி காட்டிய அதிமுக அரசு …!!

பெங்களூருவில் இருந்து அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் சென்னை வந்து கொண்டிருக்கிறார் சசிகலா. அமைச்சர்களின் புகாரால் போலீஸ் தடை விதித்துள்ள நிலையில் சசிகலா காரில் அதிமுக கொடி இருக்கிறது. பெங்களூரு தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்ட சசிகலாவை ஆரத்தி எடுத்து பெண்கள் வரவேற்றனர்.

நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை காலத்தை முடித்ததை தொடர்ந்து சென்னை திரும்புகிறார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை முடிந்த நிலையில் விடுதலையான இளவரசியும் மற்றொரு காரில் சென்னை திரும்புகிறார்.சசிகலா காரின் ஓட்டுநர், உதவியாளரை தவிர யாரும் இல்லை. டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வேறு காரின் வருகின்றனர்.

சென்னை திரும்பியதும் திநகர் கிருஷ்ணபிரியா இல்லம் அருகே உள்ள வீட்டில் தங்குகிறார் வி கே சசிகலா. இதனிடையே சசிகலா காரில் அதிமுக கொடி அகற்றப்படும் என தமிழக போலீஸ் தெரிவித்துள்ள்ளது. சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்தக் கூடாது என காவல் துணை கண்காணிப்பாளர், கிருஷ்ணகிரி உட்கோட்டம் சார்பில் நோட்டீஸ் கொடுத்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *