தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் ஜென்டில்மேன் படத்தில் தனது முதல் சினிமா வாழ்க்கையை ஆரம்பித்தார். அதன் பின்னர் காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன், அந்நியன், எந்திரன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமைந்து வசூலில் படு சூப்பராக இருக்கும். இயக்குனர் சங்கரிடம் வேலை பார்க்கும் அத்தனை கலைஞர்களும் எதிர்காலத்தில் மிகப்பெரிய படைப்பாளிகளாக இருப்பார்கள்.
அப்படி சங்கரின் உதவி இயக்குனராக இருந்து இன்று பாலிவுட் வரையிலான படங்களை இயக்கி வருகிறார் அட்லீ. ஆனால் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்த செல்வேந்திரன் பட வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்கும் சம்பவம் நடந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
