முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மணலி மாவடி வளாகத்தில் வேலாயுதம்(81) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட வேலாயுதத்தை அவரது சகோதரியின் மகள் கீதா என்பவர் பராமரித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்ட வேலாயுதத்தை கீதா மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார் அப்போது சகோதரர்கள் வந்து வேலாயுதத்தை பார்க்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த முதியவர் உணவு சாப்பிடாமல், யாரிடமும் பேசாமல் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை கொண்டு வருகின்றனர்.