கௌதம் கார்த்திக் – மஞ்சிமா திருமண தேதி அறிவிப்பு…. எப்போது தெரியுமா?…. இதோ பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வந்த நவரச நாயகன் கார்த்திக் மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் முதன்முதலாக கடல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர்தேவராட்டம் திரைப்படத்தில் தனது ஜோடியாக நடித்த மஞ்சிமா மோகனை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக அண்மைக்காலமாக பல தகவல்கள் இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கின்றன. இதற்கு இருவரும் எந்த ஒரு மறுப்பும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் அண்மையில் தங்கள் காதலை உலகிற்கு கூறினர்.

இந்நிலையில் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் ஜோடி நவம்பர் 28ஆம் தேதி சென்னையில் வைத்து கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளனர். கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக காதலித்து வந்த நிலையில் இவர்கள் தற்போது திருமணம் செய்து கொள்ள இருப்பதால் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply