“கோஷங்கள் எழுப்பி நுகர்ப்பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் திரண்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள்”…. பரபரப்பு…!!!!!

நுகர் பொருள் வாணிபக் கழகக் கிடங்கின் முன் தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பி திரண்டதால் அங்கே பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலைரோடு சேனாதிபதி பாளையத்தில் தமிழ்நாடு நுகர்வோர் வாணிப கழக கிடங்கு உள்ளது. ரேஷன் பொருட்கள், அரிசி மூட்டைகள் அங்கு தான் வைக்கப்படுகின்றது.

இங்கு 27 பேர் சுமை தூக்கும் தொழிலாளர்களாக பல வருடங்களாக வேலை பார்த்து வருகின்ற நிலையில் நேற்று நுகர்பொருள் வாணிப கழகக் கிடங்கில் பத்துக்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணிபுரிய வந்ததால் நுகர்வோர் வாணிபக் கழக கிடங்கின் முன்பாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஒன்று திரண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தாலுகா போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள். மேலும் வாணிபக் கழக கிடங்கின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *