கோவை: திருட்டு மற்றும் வழிப்பறி…. விமானத்தில் வரும் கொள்ளை கும்பல்…. வெளியான திடுக்கிடும் தகவல்…!!!

தொடர்ந்து திருட்டு மற்றும் வழிப்பறி போன்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் பகுதியில் தொடர்ந்து திருட்டு ,வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் காரணமாக காவல்துறையினர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது பேருந்து நிலையம் அருகே ஒரு முதியவரிடமிருந்து சில நபர்கள் செல்போன் மற்றும் பணத்தை திருடுவதை காவல்துறையினர் பார்த்துள்ளனர்.

இதனையடுத்து காவல்துறையினர் மூதியவரிடம் திருடிய 7 பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அதன் பிறகு காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் என்பதும், மற்றவர்கள் மனிஷ் மஹோலி, பப்லு மகடோ, சந்தோஷ் மற்றும் பகதூர் மகடா என்பதும் தெரிய வந்தது. அதன் பிறகு அவர்கள் ஜார்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் இருந்து வாரத்திற்கு ஒரு முறை கோவைக்கு வந்து ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருப்பார்கள்.

அதன் பிறகு கூட்டம் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள பொது மக்களிடம் இருந்து பணம் மற்றும் பொருட்கள் போன்றவற்றை திருடிவிட்டு சொந்த மாநிலத்திற்கு திரும்புபோது  ஒருவர் விமானத்திலும் மற்றவர்கள் ரயிலிலும் சென்று விடுவார்கள். மேலும் அவர்கள் திருடிய பணத்தை வைத்து ஆடம்பரமாக செலவு செய்வார்கள் எனவும் கூறியுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் சிறுவர்கள் 3 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டு, மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *