கோவையில் பரபரப்பு….! ”விமானப்படை பெண் அதிகாரிக்கு…. பாலியல் வன்கொடுமை….!!

கோவையில் விமானப்படை பயிற்சிக்கு வந்த பெண் அதிகாரியை பாலியல் வன்கொடுமை அளிக்கப்பட்டதாக கொடுக்கப்பட்ட புகாரில் சக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவையில் இந்திய விமானப்படை பயிற்சி கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் பயிற்சி பெறுவதற்காக ஆங்காங்கே இருக்கின்ற மாநிலங்களில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் பயிற்சி பெறுவதற்காக கோவை விமானப்படை பயிற்சி கல்விக்கு வந்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் கடந்த 10ஆம் தேதி இந்த கொடூர சம்பவம் என்பது நடைபெற்று இருக்கிறது.அதாவது விமானப்படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற வந்த பெண் விமானப் படை அதிகாரியை மற்றொரு அதிகாரி லெப்டினன்ட் அமிர்தேஷ் என்ற அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் ஒன்று  கிளம்பி இருக்கிறது.

அதன் அடிப்படையில் அந்த பெண் அங்கு இருக்கக்கூடிய உயர் அதிகாரிகளிடம் பாலியல் வன்கொடுமை தொடர்பாக புகார் அளித்திருக்கிறார். ஆனால் அவர்களது விசாரணையிலும்,  அவர்களது நடவடிக்கைகளும் திருப்தி அளிக்காத சூழலில் பாதிக்கப்பட்ட பெண் கோவை மாநகர காவல் ஆணையருக்கு  ஆன்லைன் வாயிலாக புகார் ஒன்றை அனுப்பி இருக்கிறார்.

அந்த புகாரின் பேரில் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள காட்டூர் மத்திய மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது. அமிர்தேஷ் மீது பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நேற்று இரவு மிர்தேஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது தன்னை காவல்துறையினர் கைது செய்ததற்கு எந்தவித அதிகாரமும் இல்லை என்று தனது வழக்கறிஞர் மூலமாக ஒரு மனுவை தாக்கல் செய்திருக்கிறார்.

அதன் அடிப்படையில் காவல்துறையினர் பதில் மனு தாக்கல் செய்ய ஒரு நாள் தங்களுக்கு அவகாசம் வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை கொடுத்திருக்கிறார்கள். அதனடிப்படையில் விமானப்படை அதிகாரி ஒரு நாள் மட்டும் காவலில் இருக்குமாறு திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த சூழ்நிலையில் இன்று அல்லது நாளை காலை காவல்துறை தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *