தென்காசி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பூலுடையார் சாஸ்தா அய்யனார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வெகு விமர்சையாக திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் நடப்பாண்டிலும் கோவில் திருவிழா தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோவிலில் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தீ விபத்தின் காரணமாக 4 சமையல் கேஸ் சிலிண்டர்கள் வெடித்தது. இதனால் அருகில் உள்ள 50க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலாகின. மேலும் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் தீயால் சேதம் அடைந்ததுடன் திருவிழாக்காக கொண்டுவரப்பட்ட ஆடுகள் அனைத்தும் உயிரிழந்தன. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.