கோவில் திருப்பணி.. ஒன்றரை அடி உயரமுள்ள அப்பர் சிலை கண்டெடுப்பு…!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமருகல்  ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி பிரம்ம நந்தீஸ்வரர் தெருவில் திருப்புகலூர் வேளாக்குறிச்சி ஆதீனத்திற்குட்பட்ட பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் திருப்பணி நடத்த முடிவு செய்யப்பட்டு நேற்று திருப்பணிகள் தொடங்கியது. இந்நிலையில் பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோன்டியபோது சுமார் ஒன்றரை அடி உயரமுள்ள அப்பர் சிலை 1 1/2 கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நாகை தாசில்தாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் தாசில்தார் ராஜசேகர், வருவாய் அலுவலர் ஜெயந்தி, போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மற்றும் தொல்லியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து அப்பர் சிலையை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து வேறு ஏதேனும் சிலைகள் இருக்கிறதா என கோவிலை சுற்றி தோண்டி பார்த்தனர். ஆனால் அங்கு வேறு எந்த சிலையும் கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து அப்பர் சிலையை அங்கிருந்து நாகை தாசில்தார் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர்.

Leave a Reply