கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

வீட்டில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் மாரியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார். இவர்கள் மீண்டும் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் தங்க நகை மற்றும் மூன்று லட்ச ரூபாய் பணம் போன்றவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து நடேசன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *