தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ஜொலிப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தற்போது கிரேட் இந்தியன் கிச்சன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் அந்த படத்திற்கான பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்க படாதது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, பொண்ணுங்களுக்கு தீட்டா. எந்த கடவுள் சொல்லுச்சு. கடவுள் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆண், பெண் என்ற வித்தியாசம் எல்லாம் கிடையாது.

எந்த கடவுளும் என் கோவிலுக்குள் இவர்கள்தான் வரணும் அவர்கள் வரக்கூடாது என்று சொல்வது கிடையாது. சட்டங்கள் எல்லாம் மனிதர்களால் உருவானது தான். நான் இது போன்ற கட்டுப்பாடுகளை நம்புவதில்லை. இப்போதும் ஆணாதிக்கம் இருக்கத்தான் செய்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் ஆணாதிக்கம் என்பது அதிக அளவில் இருக்கிறது என்பது என்னுடைய கருத்து என்று கூறினார். மேலும் சபரிமலை கோவிலில் பெண்கள் அனுமதிக்க படாதது குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் கூறிய கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.