கோழிக்கறி சாப்பிட்ட 4 வயது சிறுவன் மரணம்… தந்தை பரபரப்பு புகார்..!!

கோவையில் சிக்கன் உண்ணும்போது கோழிக் கறித் துண்டு தொண்டையில் சிக்கிக் கொண்டதால் 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வடவள்ளி பகுதியில் காமாட்சி என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி பிங்கி என்பவர் குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து லிங்கேஷ் என்ற நபருடன் வசித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு கபிலேஷ் என்ற 4 வயது மகன் இருக்கின்றான். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லிங்கேஷ், பிங்கி மற்றும் அவரின் மகன் கபிலேஷ் மூவரும் சிக்கன் சாப்பிட்டுள்ளனர். அச்சமயத்தில் கோழிக்கறி எலும்புத்துண்டு தொண்டையில் மாட்டி சிறுவன் தவித்திருக்கிறார். சிறுவனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆனால் மருத்துவமனைக்கு சிறுவன் வருவதற்கு முன்னரே பரிதாபமாக உயிரிழந்து விட்டான். பின்னர் சிறுவனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த சிறுவனின் தந்தை காமாட்சி சிறுவனின் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும், அவரின் மனைவி பிங்கி குழந்தையை கொலை செய்து இருக்கலாம் என்றும் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதே சமயத்தில் சிறுவனின் உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென காமாட்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *