கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி நகரில் சுகுமாரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபா என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் சுபா தனது வீட்டிற்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் காரில் சென்று சுபாவுக்கு அருகே வாகனத்தை நிறுத்தி உள்ளார்.

இதனையடுத்து திடீரென அந்த நபர் சுபாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி அவரது கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சுபா ஓசூர் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.