“கோத்தகிரியில் பறவைகளின் உள்ளூர் வலசை தொடக்கம்”…. ஆர்வமுடன் கண்டு களித்த சுற்றுலா பயணிகள்…!!!!!!

நீலகிரி மாவட்டம் மிகச்சிறந்த உயிர் சூழல் மண்டலமாக இருக்கிறது. மேலும் மாவட்டத்தின் 62% பகுதி வனப்பகுதியாக அமைந்திருக்கிறது. இங்கு கோத்தகிரி பகுதியில்  உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகளின் முக்கிய வலசை பாதையாக இருக்கிறது. கோத்தகிரியில் உள்ள வனத்துறைக்கு சொந்தமான கோடநாடு காட்சி முனை கோத்தரின் நீர்வீழ்ச்சி, உயிலட்டி நீர்வீழ்ச்சி, லாங்வுட் சோலை போன்ற பகுதிகளில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருடம் தோறும் வலசை பயணமாக வந்து செல்வது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. தற்போது சீசன் காரணமாக இந்த பகுதியில் மரங்கள் உட்பட தாவர இனங்களில் பழங்கள் அதிக அளவில் காணப்படுவதால் பறவைகளுக்கு ஏற்ற உணவு கிடைக்கின்றது.

மேலும் இதமான காலநிலை என்ற காரணத்தினால் இனப்பெருக்கத்திற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வர தொடங்கி இருக்கிறது. கோத்தகிரியில் பறவைகளின் வலசை தொடங்கி இருப்பதால் சமவெளி பகுதியில் இருந்து கோடநாடு காட்சி முனை, கோத்தரின்  நீர்வீழ்ச்சி மற்றும் லாங்குச் சோலை போன்ற பகுதிகளில் அரிய வகை பறவைகளின் வருகை அதிகரித்திருக்கிறது. இந்த பறவைகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன்  கண்டு  ரசித்து வருகின்றனர்.

இது பற்றி பறவைகளை ஆவணப்படுத்தி வரும் ஊட்டியை சேர்ந்த புகைப்பட கலைஞர்கள் மதிமாறன் கூறியபோது நீலகிரி மாவட்டத்தில் வருடம் தோறும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவைகள் வருவது வழக்கமாகும். இந்த வருடம் தொடர் மழை மற்றும் வனப்பகுதியில் பறவைகளுக்கு ஏற்ற பல வகைகள் அதிகமாக இருக்கிறது. இந்த பல வகைகளை உண்பதற்காகவும் இனப்பெருக்கத்திற்காகவும் தற்போது சமவெளி பகுதியில் இருந்து பறவைகள் உள்ளூர் வலசையை தொடங்கி இருக்கிறது. இதில் நீலகிரி பிளைகேச்சர், மலபார் விசிலிங் திரஸ், நீலகிரி லாபிங் திரஸ், ஒயிட் சீக் பார்பிட், ஒயிட் ஐ, ஆரஞ்சு ஏல்லோ பிளைகேச்சர் உட்பட நூற்றுக்கணக்கான அரியவகை பறவை இனங்கள் கோத்தகிரி பகுதியில் தற்போது அதிகமாக காணப்படுகின்றது அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *