கோடை காலத்தில் அதிக வெப்பத்தை சமாளித்து உடல் உஷ்ணத்தை குறைப்பதில் மோர் பெரிதும் உதவும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் உடலுக்கு குளிர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல் மோர் எண்ணற்ற நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. இதில் வைட்டமின் பி உள்ளது. இந்த வைட்டமின் அதிகப்படியான உடல் சோர்வை உடனடியாக சரி செய்து ஆற்றலை வழங்கக் கூடியது.
உடம்பில் உள்ள அமினோ அமிலங்களை கட்டுப்படுத்தி உறுப்புகளை சுறுசுறுப்பாகி இயக்க உதவுகிறது. மோர் அருந்துவதால் செரிமான அமைப்பு சீராவதோடு இதயம், சிறுநீரகம் மற்றும் கண் ஆரோக்கியம் மேம்படுகிறது. விட்டமின் காதுகளுக்கு மற்றும் ப்ரோ பயோடிக்ஸ் நிறைந்த மோர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.
மோர் உட்கொள்வதால் கெட்ட கொழுப்புகள் கணிசமாக குறையும் என்பதால் கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மோரை அவ்வ போது உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். கால்சியம் அதிகம் உள்ள மோர் பருகுவதால் எலும்புகள் வலுபடுவதோடு பற்களின் ஆரோக்கியம் மேம்படுகிறது. மோர் குடிப்பதால் உடலுக்கு ரத்தம் ஓட்டம் மேம்படும் என்பதால் மோர் குடிப்பதை வழக்கம் ஆக்கிக் கொள்வது ஆரோக்கியத்தில் சிறப்பான மாற்றத்தை ஏற்படுத்தும் என உணவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.