கொழுந்து விட்டு எரிந்த தீ…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…. போலீஸ் விசாரணை…!!

தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கூவாட்டுப்பட்டியில் பஞ்சநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான தைல மரக் காட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு தைல மரக்காட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *