கொழுந்து விட்டு எரிந்த தீ…. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் நாசம்…. நீலகிரியில் பரபரப்பு….!!

தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கப்பட்டி கிராமத்தில் சலிம் என்பவருக்கு சொந்தமான தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் இரவு நேரத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்ததும் வேலை பார்த்ததும் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை அணைத்துவிட்டனர். ஆனால் இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகிவிட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *