கொழுந்து எரிந்த கூரை வீடுகள்…. 2 மணி நேர போராட்டம்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!

தீ விபத்து ஏற்பட்டதால் 2 கூரை வீடுகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பவுஞ்சிபட்டு கிராமத்தில் அல்லாபஷி(65) என்பவர் வசித்து வருகிறார். இவரது கூரைவீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்துள்ளது. மேலும் அருகில் இருக்கும் நூருல்லா என்பவர் வீட்டு கூரை மீதும் தீ வேகமாக பரவியது. இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீடுகளில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.

ஆனால் இந்த தீ விபத்தில் இரண்டு வீடுகளும் எரிந்து சேதமானது. அந்த சமயம் வீட்டில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *