கொளுத்தும் வெயிலும்….. மாணவர்களுடன் இணைந்து….. யோகா செய்த அமைச்சர்….!!!!

சேலம் ஜங்ஷன் பகுதியில் உள்ள சோனா தொழில்நுட்பக் கல்லூரியில், சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு,நேற்று யோகா பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்துகொண்டு யோகாசனம் செய்துள்ளார்.

மேலும் இவருடன் இணைந்து 500-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகளும்  இப்பயிற்சியில்  கலந்துகொண்டு, யோகாசனம் செய்தனர். அதிலும் குறிப்பாக, மழலை குழந்தைகள் செய்த யோகாசனம், காண்போரை வியக்க வைக்கும் வகையில், அருமையாக அமைந்திருந்தது.

இதையடுத்து எப்போதும் வழக்கமாக காலை 8 மணிக்குள் நடைபெறும் யோகா பயிற்சியானது, நேற்று காலை 10 மணிக்கு மேல் தொடங்கியது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டாலும்,  அந்த கொளுத்தும் வெயிலிலும் அமைச்சர் மாணவ, மாணவிகளுடன் இணைந்து, யோகாசனப் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *