கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் என்ற மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதில் மருத்துவராக பணிபுரிந்த பெண் மருத்துவர்(31) கடந்த 9-ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். பின்னர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் சமூக ஊடகத்தில் பிரபலமாக இருக்கும் யூ-டியூபர் சாரா சரோஷ்  என்பவர் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். அதில் கொல்கத்தாவில் நடந்த பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை குறித்து பேசியுள்ளார். அதற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் அவர் அந்த வீடியோவை நீக்கி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, இந்த விஷயம் தெரியாதவர்களுக்கு தெரிய வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். ஆனால் இந்த வீடியோ வெளியிட்டதற்காக எனக்கு நிறைய பேரிடம் இருந்து பாலியல் பலாத்காரம் மிரட்டல்கள் வருகின்றன. நான் கடவுளிடம் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். எனக்கு அல்லது வேறு எவருக்கோ ஒருபோதும் இது போன்ற விஷயம் நடக்கக்கூடாது என்று அவர் அந்த அறிக்கையில் தெரிவித்தார். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இதனை வெளிப்படையாக பேசுவதே என்னுடைய நோக்கம்.

அவர் அந்த வீடியோவில், என்னுடைய தோழி ஒருத்தி எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துவிட்டு, முதுநிலை படிப்பை படித்து வருகிறார். ஒருநாள் படித்துவிட்டு, அவர் தூங்கிக் கொண்டிருக்கும்போது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் பணியில் இருந்த போதே இது நடந்தது. ஒரு பெண் பலாத்காரம் செய்யப்பட்டால், அவர் என்ன தவறு செய்திருக்கிறார் என்று தான் இந்த சமூகம் பார்க்கிறது. ஆனால் சுற்றி இருந்தவர்கள் செய்த விஷயங்கள் பார்ப்பதே இல்லை.

இவர்கள் டாக்டர் சீட்டைப் பெறுவதற்காக கடுமையாக போராடி, படித்து பட்டப்படிப்பை வாங்குகின்றனர். அவர்களது பெற்றோரோ தங்களுடைய குழந்தைகளுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைக்க தங்களுடைய பல கனவுகளை தியாகம் செய்கின்றனர். அந்த மருத்துவமனையின் முதல்வர் இடமும், பெண் டாக்டரின் பெற்றோர்களிடமும் கூறுவதற்கு எந்த பதிலும் இல்லை என்று தெரிவித்தார். அவர்களுடைய மகளை அவர்கள் இழந்துவிட்டனர் ஆனால் நம்மிடம் பதில் இல்லை என்று கூறினார்.