கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதிலும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் மருத்துவர்கள் பலர் போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த சனிக்கிழமை முதலாக உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்நிலையில் நேற்று ஜூனியர் மருத்துவர் அனிகேத் மஹதோ உடல் நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை எடுத்து வருவது சக மருத்துவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசு எப்போது எங்களுக்கு பதில் கொடுக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மேலும் சில மருத்துவர்களும் பல சிக்கல்களை சந்தித்து வருகின்றனர் என்று கூறப்படுகிறது.