கொரோனோவை எதிர்த்து நிக்க தயாராகும் நம் நாட்டின் மூலிகை.. சித்த மருத்துவர் திருத்தணிகாசலம்..!!

கொரோனா  வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மூலிகை மருந்துகளின் மூலம் 48 மணி நேரத்தில் குணப்படுத்த முடியும் என சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஜெனிவாவில் உள்ள ஐநா மனித உரிமை ஆணையம் கூட்டத்தில் பேசியுள்ள அவர் கொரோனா  வைரஸால் ஏற்படும் நெஞ்சடைப்பு, நுரையீரல், சிறுநீரக பாதிப்புகளை நிலவேம்பு கருங்காலிக் மரப்பட்டை, கருமத்தை பூ, உள்ளிட்ட நோய்களை குணபடுத்த முடியும் என தெரிவித்தார்.

கருமத்தையின் பூவை வெந்நீரிலோ அல்லது சூடாக காய்ச்சிய பாலில் இந்த  போட்டு குடிக்க வேண்டும். இரண்டாவது மூச்சுவிடுவதில் சிரமம் இருக்கிறது அப்படி என்றால் ஆடாதோடை நொச்சி இலைகளை, மஞ்சள், சுக்கு, சித்தரத்தை இவை அனைத்தையும் அவித்து வைத்து ஆவி பிடிக்க வேண்டும். இப்படி செய்தால் நுரையீரலில்  இருக்கக்கூடிய சளியை வெளியேற்றி விட முடியும். நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கும்.

கொரோனா வைரஸ் பாதிப்பை குணப்படுத்த மூலிகை மருத்துவ குறிப்புகள் இந்தியாவில் உள்ள சீன தூதரகத்திற்கு திருத்தணிகாசலம் அறிக்கை அளித்துள்ளார். இதை குறித்து பரிசீலித்து எதிர்காலத்தில் பாரம்பரிய மருத்துவத்தை இந்தியா, சீனா இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை தூதரகம் தெரிவித்துள்ளது.