கொரோனா 4 வது அலை …. ஏப்ரல் 1-ஆம் தேதி முதல்… பிரபல நாட்டில் 4 வது டோஸ் கொரோனா தடுப்பு ஊசி…!!!!!!

ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் 4வது ‘டோஸ்’  தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படுகிறது.

நமது நாட்டில் கொரோனாவுக்கு  எதிராக தற்போது 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பு ஊசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி என்னும் பெயரில் போடப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவில் குளிர் காலத்திற்கு முன்னதாக பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு நான்காவது டோஸ் கொரோனா தடுப்பூசியை போடுவதற்கு மருத்துவர் கட்டுப்பாட்டாளர்கள் ஒப்புதல் அளித்து இருக்கிறார்கள்.

இது இரண்டாவது பூஸ்டர் டோஸ் தடுப்பு ஊசி ஆகும். 65 வயதிற்கு மேற்பட்டோருக்கும்,  50 வயதிற்கு மேற்பட்ட பழங்குடியினருக்கும், ஊனமுற்றோர், பராமரிப்பு இல்லங்களில் இருப்போருக்கும் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவருக்கும்  இந்த தடுப்பூசி போடப்படும். மேலும் இதற்கான பணி ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு செல்வோர் கொரோனா  நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்வதாக ஆஸ்திரேலிய அரசு நேற்று அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *