கொரோனா 2வது அலை… ஏப்ரல் 6 முதல் 14 வரை…. பிரதமர் மோடி ஆலோசனை..!!

கொரோனா 2வது அலை தீவிரமடைந்துள்ள காரணத்தினால் பிரதமர் மோடி சுகாதார செயலாளருடன் தீவிர ஆலோசனை நடத்தி உள்ளார்.

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. இதற்காக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கொரோனா 2வது தீவிரமடைந்துள்ள நிலையில் பிரதமர் மோடி அமைச்சரவை செயலாளர் சுகாதாரத்துறை செயலாளர் அடங்கிய குழுவுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது,கொரோனா தொடர்பான நடத்தைகளை ஏப்ரல் 6 முதல் 14 வரை மேற்கொள்ள வேண்டும். கொரோனா விதிகளை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை தீவிரமாக அமல்படுத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், ஊரடங்கு குறித்து விரைவில் அறிவிப்பார் என கூறப்படுகிறது.