கொரோனா வைரஸ் விழிப்புணர்வு.. தமிழக அரசிற்கு நடிகர் சித்தார்த் பாராட்டு..!!

உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு  தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மெருக்கொண்டு வருகிறது. அதை கண்டு நடிகர் சித்தார்த் பாராட்டியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் சித்தார்த் ,  செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர், அனைத்து நாடுகளிலும் கொரோனா வைரஸ் பரவி வருவதால், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என கூறினார். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தமிழக அரசு தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும், தமிழக அரசின் இந்த  நடவடிக்கைகள்   திருப்திகரமாக உள்ளது உணவு அவர் தெரிவித்தார்.