கொரோனா வராமல் தடுக்க…இயற்கை அளித்த பொக்கிஷங்கள் போதுமானது.. இனி பயம் எதற்கு..!!

கொரோனா நோயால் உயிர் பலிகள் தொடரும் நிலையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நம் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன என்பதை குறித்து இப்பொழுது பார்க்கலாம்..!

கருஞ்சீரகம், பப்பாளி, கேரட் இவைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நாள் ஒன்றுக்கு 6 வால்நட்ஸ் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். உணவில் இஞ்சி சட்னியை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டு சட்னி உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். 3 பூண்டுகளை நசுக்கி பாலில் சேர்த்து கலந்து அதனை பருகுவதும் நல்ல பலன் கொடுக்கும்.

நட்சத்திர சோம்பு அல்லது அண்ணாசி பூ என்றழைக்கப்படும் மசாலா பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். கிரேவி போன்ற பதார்த்தங்களை செய்யும் பொழுது இந்த அன்னாசிப் பூவை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. பிறநாட்டு பழங்களை தவிர்த்துவிட்டு உள்ளூரில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை இந்த சீசனில் கிடைக்கும் காய்கறிகள் பழங்களையும் சாப்பிடுங்கள்.

அசைவ உணவுகளையும், ஹோட்டல் உணவுகளையும் தவிர்த்துவிட்டு வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுங்கள், அதுவே நல்லது. சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேன் சேர்த்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய், இருதய நோய் இல்லாதவர்கள் தேங்காய் எண்ணெய்யை  உணவில் சேர்த்துக்கொள்ளலாம் .

இஞ்சியை துருவி அதன் சாற்றை எடுத்து, அதில் தேன் கலந்து பருகி வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சப்பாத்தி, கிரேவி போன்ற உணவுகளில் தயார் செய்யும் பொழுது அதில் கருஞ்சீரகத்தை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள். பாலில் இஞ்சி, மஞ்சள்தூள், பொடியாக்கப்ட்ட மிளகு, துளசி இலை ,ஏலக்காய், பனைவெல்லம் ,உலர்ந்த திராட்சை இவற்றை எல்லாம் சேர்த்து குடிப்பது நல்லது.

கருப்பு திராட்சை, பிஸ்தா, ஸ்ட்ராபெரி ஆகியவற்றையும் அன்றாடம் சாப்பிடுங்கள். விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான நெல்லிக்காய் ,கொய்யாப்பழம், ஆரஞ்சு, எலுமிச்சை, குடை மிளகாய், உலர்ந்த திராட்சை, தக்காளி சாலட் ஆகியவற்றை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து அத்துடன் எலுமிச்சை சாறை கலந்து சாப்பிடுவதாலும் நல்ல பலன் கிடைக்கும்.

முருங்கை கீரை சூப் அடிக்கடி சாப்பிடுவதும் நல்லது. கீரையுடன் பூண்டு, இஞ்சி சேர்த்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தக்காளி மிளகு ரசத்தை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். தக்காளி சூப்பில் வெங்காயத்தாள் சேர்த்துப் குடிப்பதும் நல்லது. ஆண்கள் துளசி இலைகளை அளவாக சாப்பிடுங்கள் . நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று கிராம் அளவிற்கு எடுத்து கொண்டால் போதுமானது.