கொரோனா முடிவுக்கு வருமா…? பதிலளித்த பொது செயலாளர்…. வெளியான தகவல்….!!

4 மாதங்களுக்கு ஒரு முறை புதிய வகைக் கொரோனா பரவி வரும் நிலையில் அத்தொற்று முடிவுக்கு வருவதிலிருந்து வெகு தொலைவில் உள்ளது என ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார்.

சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா உலகம் முழுவதும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது. இந்த தொற்று உருமாறி அனைத்து பகுதிகளுக்கும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா சபை பொது செயலாளர் ஆண்டனியோ குட்டரேஸ் கூறியதாவது, புதிய வகை கொரோனா 4 மாதங்களுக்கு ஒரு முறை பரவி வருவதால் அத்தொற்று முடிவுக்கு வருவது வெகு தொலைவில் உள்ளது என்று கூறியுள்ளார். அது மட்டுமின்றி உலகமெங்கும் நாளொன்றுக்கு 15 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.