கொரோனா பேரிடரில் பொறுப்பேற்கும்…. ஸ்டாலினுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் இன்று பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து  ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு .க ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. துரைமுருகன், பொன்முடி உள்ளிட்ட 133 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். திமுக எம்எல்ஏக்கள் 125 பேருடன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற 8 பேரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.இதையடுத்து முறைப்படி திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து இன்று ஆளுநர் மாளிகையில் முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் பதவியேற்பு விழாவுக்கு என்னை அழைத்ததற்கு நன்றி என அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய முதல்வராக ஸ்டாலின் அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள். கொரோனா பேரிடர் நேரத்தில் பொறுப்பேற்கும் தங்களின் பணி தமிழ்நாட்டு மக்களை பாதுகாத்திடும் வகையில் அமைந்திட வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *