கொரோனா பாதிக்கும் முக்கிய…. மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் – மிக முக்கிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்தது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில்  தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பாதிக்கும் முக்கிய மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் இல்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.